PEAK – அமைதிக் கல்வி மற்றும் தன்னை அறிவதற்கான அறிவு

பிரேம் ராவத் அவர்கள் வழங்கும் அமைதிக் கல்வி மற்றும் தன்னை அறிதல் (“PEAK”), உங்கள் உள்ளார்ந்த வளங்களை ஆராய உதவும் வகையில் உருவாக்கப்பட்ட இலவசக் கல்விப் பாடமாகும். இது உங்கள் தனிப்பட்ட வலிமைகளுடனும், உங்கள் உள்ளத்தினுள் இருக்கும் ஆழ்ந்த அமைதியுடனும் உங்களைத் தொடர்புபடுத்தும் ஒரு தன்னைத்தானே அறிந்துகொள்வதற்கான பாடமாகும்.

பாடத்திட்டத்தின் குறிக்கோள்கள்

உங்கள் அடிப்படை வலிமைகள் மற்றும் உள் வளங்களுடன் இணைத்தல்

நன்றி உணர்வின் ஆழத்தை உணர்தல்

புரிந்துணர்வுடன், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பயணத்தை ஆனந்தமாக அனுபவித்தல்

● தினசரி பயிற்சி செய்வதற்கான பிரேம் ராவத் அவர்களின் தன்னை அறியும் வழிமுறைகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை
கொண்டிருத்தல்

உங்களின் மாறாத பகுதியை உணரும் பொழுது ஏற்படும் அமைதியை அறிந்து கொள்ளுதல்

PEAK பாடத்தின் சாரம்

PEAK வடிவமைப்பில் மூன்று வகையான கற்றல் அம்சங்கள் உள்ளன:

I. இந்த தலைப்பு சார்ந்த அத்தியாயங்களைப் பார்த்தல்:

1. அறிமுகம்
2. நீங்கள் யார்?
3. தெளிவு மற்றும் நம்பிக்கைகள்
4. தேர்ந்தெடுத்தல்
5. புரிந்துகொள்ளுதல்
6. நன்றியுணர்வு
7. அமைதி
8. நம்பிக்கை
9. தன்னை அறிவதற்கான அறிவு

II. உங்கள் கற்றலைப் பதிவு செய்தல்

ஒவ்வொரு அத்தியாயத்தின் மத்தியிலும், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டு, உங்கள் கற்றலைப் பதிவு செய்ய ஊக்குவிக்கப்படும். இந்த பதிவேடு உங்களுக்கானது மட்டுமே, மற்றவர்களால் இதனை பார்க்க முடியாது.

III. சிந்தனை வினாக்களுக்குப் பதிலளித்தல்

ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும், நீங்கள் அடுத்த அத்தியாயத்தை தொடங்கும் முன்,
ஒரு வினாவிற்கு உங்கள் புரிதலைச் சுருக்கமாகப் பதிலளிக்கும்படி கேட்கப்படுவீர்கள்.

அத்தியாயம் 9 இன் இறுதியில், பிரேம் அவர்களிடம் பயிற்சி பெற்ற வழிநடந்துனர் உங்கள் அனைத்து பதில்களையும் மதிப்பாய்வு செய்வார். இவை பாடத்தை முடிக்க அவசியமானவை.

PEAK பாடத்தின் அமைப்பு மற்றும் தேவைகள்

அமைப்பு

  • இணையக் கல்வி
  • சுய வேகம்

Time

  • முக்கிய உள்ளடக்கம்: ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் 40 முதல் 45 நிமிடங்கள்
  • பதிவேடு மற்றும் சிந்தனைக் கேள்விகள்: ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் 15 நிமிடங்கள்
  • பரிந்துரைக்கப்பட்ட வேகம்: வாரத்திற்கு 1 அல்லது 2 அத்தியாயங்கள்
  • மொத்த நேரம்: சுமார் 9 மணி நேரம்

தேவையான வளங்கள்

  • இணைய இணைப்பு
  • டெஸ்க்டாப், மடிக்கணினி, டேப்லெட் அல்லது மொபைல் சாதனம்
  • வீடியோ உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கான அமைதியான சூழல்

அமைதிக் கல்வி பற்றி மக்கள் கூறியவை…..